தற்பொழுது கிளை உள்ள கள்ளர்களும், பிறமலைக் கள்ளர்களும், ஈசநாட்டுக் கள்ளர்களும்
கள்ளர் எனும் ஒரேகோட்டில் நின்று தங்களுக்குள் சம்பந்தங்கள் செய்துகொள்கின்றனர். ஆனால் பல கள்ளர் மேட்ரிமோனி மையங்களில்
சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்கின்ற லட்சக்கணக்கான “ஏழு கிளை கள்ளர்களுக்கும், பாகனேரிக் கள்ளர்களுக்கும்” தகவல் மையங்களில் எந்த தகவலும் கிடைப்பதில்லை…இவர்களைப் பற்றி திருமண தகவல் மையங்களுக்கு தெரிவதுமில்லை.
அதனாலேயே இந்த “கள்ளர் வீட்டு கல்யாணம்” என்ற இந்த திருமண தகவல் மையத்தினை துவங்கியுள்ளோம். இந்த தகவல் மையம் மூலமாக அனைத்து கள்ளர்களும் ஒரு கோட்டில் நின்று ஒற்றுமையுடன் வாழ வழிவகுப்போம்.
இந்த தளத்தில் படிப்படியாக அனைத்து கள்ளர் பிரிவுகளின் பண்பாடுகளையும், கள்ளர்களின் வீரவரலாறுகளையும் இதில் பதிவேற்றம் செய்யவிருக்கிறோம்.
இதில் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு, கடந்த நூற்றாண்டுகாலமாக இந்த போர்க்குடி சமூகத்தினை அனைத்திலும் இருந்து புறக்கணிக்கப்பட்டு, நம்மை தவறானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவற்றை உடைத்தெரியவும், நம் ஆயிரமாயிரமாண்டு வீரவரலாற்றினை அனைத்துக் குடி மக்களிடமும் கொண்டு செல்லவும்… நம் தலைமுறையினரை
1.கல்வி பெற்ற சமூகமாகவும்
2. தொழில் சார்ந்த சமூகமாகவும்
3. அரசுப்பணி சார்ந்த சமூகமாகவும்
மாற்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றினை எம்மால் இயன்ற அளவிற்கு செய்வோம் என உறுதிகூறுகிறோம்.