கள்ளர் மரபினரின் வரலாறு
உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் /கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர்:கரியவன், வெட்சியர், பண்டையர், அரசர். நிலைப்படை நிலப்பகுதி கள்ளர் படைப்பற்று, குடியிருக்கும் தொகுதி கள்ளர்நாடு என்று பெயர்பெறும். கள்ளர்தடி(வளரி)
பிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர்.
மதுரை நகரத்துக்கு மேற்குப்பகுதியில் வாழ்கின்ற பிரமலைக்கள்ளர்கள், மேல்நாட்டு கள்ளர்கள் என்றும், ஆனையூர் கள்ளர்கள் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம், பாண்டியர் ஆட்சிகாலம் முதல் இப்பகுதிக்கான வருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்தது. அதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தகள்ளர்கள் ஆனையூர் கள்ளர்கள் எனப்பட்டனர்.
திருப்பரங்குன்ற மலை கிழக்கு எல்லையாகவும், ரத்தினகிரிமலை (கணவாய்மலை) மேற்கு எல்லையாகவும், குண்டாறு தெற்கு எல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ள பகுதியே புறமலை அல்லது பிரமலை நாடு என முத்துத்தேவர் குறிப்பிடுகிறார். நாகமலைக்கு வடக்கேயும் சில பூர்வீகக் கள்ளர் கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்களே பிறமலைக்கள்ளர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர்.
இவர்களுடைய குலப்பட்டம் - "தேவர்".
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கள்ளர்கள் இப்பகுதியில் வந்து குடியமர்ந்தனர் எனவரலாற்றாசிரியர் ஆர். கே. கண்ணன் குறிப்பிடுகின்றனர். 11 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டிய தேசம் சோழர்கள் ஆட்சிக்குப் உட்பட்டிருந்த போது பாண்டிய தேசத்தில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதன் பொருட்டு தஞ்சையில் இருந்து தமது சமுக கள்ளர்களை கொண்டு வந்தனர். இவர்களை நாகமலை, ஆழகர் மலையில் கோட்டை கட்டிக்குடியமர்த்தினர் என்பர். ஆனால் இந்த பகுதியின் பூர்வ தொல் பழங்குடி மக்களுக்கான பாரம்பரிய கலாச்சார அடையாளங்களுடன் பிறமலை கள்ளர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். M130y என்ற மரபணு அறிக்கை இம்மக்களை தொல்குடிகள் என்று ஆய்வு பூர்வமாக நிறுபிக்கிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே திடியன் பகுதி குறிப்பிட்டப்படுகிறது. திடியன் கூட்டத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார்.
அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு எட்டிற்கும் கம்பளிவிரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் திருமலைபின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றது.
பிரமலைப்பகுதி இராஜதானி, எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. இதன் தலைமைக் கிராமம் ராஜதானி என அழைக்கப்படுகிறது. இவ்வகை அமைப்பு எக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதனை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. இந்த எட்டுநாடுகள் உருவாக்கப்பட்டபின்பு புதிதாக உருவானகிராமங்கள் அவற்றிற்குத் துணைகிராமங்கள் என்ற வகையில் உபகிராமங்களாக அடுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம்.
கள்ளர்கள் தாங்களாகவே சுயமாகத் தாங்கள் வாழ்கின்ற பகுதியை எட்டுநாடுகளாகப் பகிர்ந்து கொண்டனர். அதில் தன்னரசு ஆட்சியை உருவாக்கினர். பின்னத்தேவர் இந்த எட்டுநாட்டின் தலைவராகவும், அவர் வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது.
உரப்பனூர், பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைமைக்கிராமமாகக் கருதப்படுகின்றது. ஓர் அப்பன் ஊர் என்ற சொல்லே உரப்பனூர் என்று மருவியது என்கின்றனர். இது கீழ்உரப்பனூர், மேல்உரப்பனூர், ஊராண்டஉரப்பனூர் என மூன்று கிராமங்களாக உள்ளது. இவை இன்றைய திருமங்கலம் ஒன்றியத்தில் அமைந்திருக்கின்றன.
பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர், பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆர்.ஜே மூர் என்பவர் தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பண்டைய அரசகட்டமைப்பு, அரசியல், பண்பாடு, கலாச்சாரம் முதலான ஆய்வுகளை தன்னுடைய புத்தகத்தில் பல ஆதாரங்களோடு இனைத்துள்ளார்.
அப்படி அவர் தமிழ் நாட்டில் உள்ள அரச கட்டமைப்பில் மிகவும் வியந்து குறிப்பிட்ட அரச கட்டமைப்பு, பிறமலைக்கள்ளரின் 8நாட்டு 24 உப கிராமங்கள் கொண்ட தன்னரசு கள்ளர் நாடுகள் தான்.
அதாவது இந்த தன்னரசு கள்ளர் நாடுகள் 8 நாடுகளாகவும் அந்த நாடுகளுக்கு தேவர் பட்டம் கொண்ட ஒரு மன்னரும் அந்த மன்னருக்கு கீழ் 3அமைச்சர்களும், அந்த 3அமைச்சரின் கட்டுப்பாட்டில் நாட்டு மக்களும் இருந்துள்ளனர்.
இதில் வியக்கதக்க விசயமாக ஆர்.ஜே மூர் அவர்கள் குறிப்பிடுவது. நாட்டு மக்கள் அனைவரும் அமைச்சருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். அமைச்சர்கள் அனைவரும் மன்னருக்கு(தேவர்) கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் மன்னர் 8 நாட்டில் உள்ள தெய்வங்கள் அதாவது 8 நாட்டு தலைமை கோவிலில் உள்ள வீரர், பட்டவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக வருகிறார். அதாவது கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள ஊடகமாக மன்னர் (தேவர்) இருந்துள்ளனர்.
இந்த அரச கட்டமைப்பை ஆர்.ஜே மூர் அவர்கள் மனு சாஸ்த்திரத்தில் உள்ள மன்னர்களுக்கு இதே போல தான் அரச கட்டமைப்பு இருக்கிறது. அதாவது மக்கள் அனைவரும் அரசனுக்கும், அரசன் கடவுளுக்கு கட்டுப்பட்டவர்களாக வருகிறது என்கிறார்.
ஒரு ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று ஆய்வாளர் தெற்காசியாவின் அரசகட்டமைப்பை ஆய்வு செய்யும் போது கள்ளர் நாடுகளை தவிர்க்க முடியாமல் எழுதுகிறார். காரணம் அந்த மக்களின் தனித்துவமான பண்பாடு ஒரு மையப்புள்ளியாக இருக்கிறது.
பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.
1. விக்கிரமங்கலம்,
2. நாட்டார்மங்கலம்,
3. வகுரணி,
4. காளப்பன்பட்டி,
5. மானூத்து,
6. அல்லிக்குண்டம்,
7. பொசுங்குநகரம்,
8. பிச்சங்குளம்,
9. சாத்தங்குடி,
10. வடபழஞ்சி,
11. சாக்கிலிப்பட்டி,
12. தோப்பூர்,
13. கப்பலூர்,
14. தனக்கன்குளம்,
15. விளாச்சேரி,
16. வடிவேல்கரை (கீழக்குயில்குடி)
17. சூடாபுளியங்குளம்,
18. பன்னியான்,
19. தாராப்பட்டி,
20. மேலக்கால்,
21. கச்சிராப்பு,
22. காடுபட்டி,
23. அய்யனார்குளம்,
24. கொடிக்குளம்.
முத்துத்தேவர் பட்டியல்
1. விக்கிரமங்கலம்,
2. நாட்டார்மங்கலம்,
3. அய்யனார்குளம்,
4. பன்னியான்,
5. தாராப்பட்டி,
6. மேலக்கால்கச்சிராப்பு,
7. காடுப்பட்டி,
8.கொடிக்குளம்,
9. வகுரணி,
10. அல்லிக்குண்டம்,
11. மானுத்து,
12. பெருங்காமநல்லூர்,
13. காளப்பன்பட்டி,
14். பூசநாதிபரும் என்ற பூசலப்புரம்,
15. மதிப்பனூர்,
16. சாத்தங்குடி,
17. புங்கங்குளம்,
18. சாக்கிலிப்பட்டி,
19. தோப்பூர்,
20. மேல்நாடுசெட்டிகுளம்,
21. கப்பலூர்,
22. விளாச்சேரி
23. வடிவேல்கரை,
24. சூடாபுளியங்குளும்.
லூயிஸ்டூமண்ட் பட்டியல்
1. விக்கிரமங்கலம்,
2. நாட்டார்மங்கலம்,
3. அய்யனார்குளம்,
4. கொடிக்குளம்,
5. முதலைக்குளம்,
6. பன்னியான்,
7. வடிவேல்கரை,
8.விளாச்சேரி,
9. தனக்கன்குளம்,
10. சாக்கிலிபட்டி,
11. தோப்பூர்,
12. மேல்நாடுசெட்டிகுளம்,
13. கப்பலூர்,
14. சாத்தங்குடி,
15. பன்னிக்குண்டு,
16. அம்மாப்பட்டி,
17. காளப்பன்பட்டி,
18. பூசலப்பரும்,
19. மதிப்பனூர்,
20. பெருங்காமநல்லூர்,
21. மானூத்து,
22. அல்லிக்குண்டம்,
23. வகுரணி,
24. மறவன்குளம்.
மேலும் அவர் காடுபட்டியும் கச்சிராப்பும், தாராப்பட்டியும் உபகிராமங்களில் ஒன்றாகச் சிவணாண்டி சேர்வை வரிசைப் படுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலும் மதுரை கள்ளர்களின் வரலாறு பேச கூடிய அனைவரும் பிறமலைக்கள்ளர்கள் தஞ்சையில் இருந்து வந்தவர்கள் என்றே கூறிவருகிறார்கள். அதற்கு காரணம் முத்துதேவர் எழுதிய மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு என்ற புத்தகங்களின் வாயிலாக தான் கள்ளர்கள் தஞ்சையில் இருந்து வந்தார்கள் என்ற ஒரு கண்ணோட்டம் அனைத்து ஆய்வாளர்கள் மத்தியிலும் தொற்றிக்கொண்டது.
தஞ்சையில் இருந்து தான் கள்ளர்கள் மதுரைக்கு வந்தார்கள் என்று எந்த ஆதாரமும் கிடையாது. எல்லாம் பயனற்ற ஊகத்தை வைத்து மட்டுமே அப்படி சொல்கிறார்கள். மேலும் பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் என்ற ஒரு புத்தகத்தின் வாயிலாக தான் இந்த தவறான விசயம் அதிகளவு கள்ளர் சமூகத்தினர் மத்தியில் பதிந்தது. அது இன்று வரை தொடர்கிறது. அதுவும் நாயக்கர் காலத்தில் இருந்து தான் பிறமலைக்கள்ளர் வரலாறு தொடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் சுந்தர வந்திய தேவன் அவர்கள் தம்முடைய தனிப்பட்ட ஊகத்தின் அடிப்படையிலே தான் பிறமலைக்கள்ளர்கள் தஞ்சையில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தை முன் வைத்தாரே தவிர ஆதாரத்தின் அடிப்படையில் அவர் நிறுபிக்கவில்லை.
உண்மையில் கள்ளர்கள் மதுரையின் பூர்வ தொல்குடியினர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளது. அவை காலத்தின் அடிப்படையில் சற்று பார்ப்போம்.
பிறமலை கள்ளர்கள் ஆதியில் இருந்து இந்த பகுதியில் இருந்த தொல்குடிகள் என்பதற்கு ஆதாரமாக அவர்களின் நாட்டமைப்பு ஊர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி கிராமத்தில் சமணச்சின்னம் பெருமாள்மலை, பாண்டவ மலை உள்ளது. அங்கே சமணர் குகையோன்றை காணலாம்.
இருபதுக்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள், மகாவீரர் சிலையாக அமர்ந்து அர்த்தபரியன்காசனத்தில் தியானித்து இருக்கிறார்.
1) கிமு 2ம் நூற்றாண்டில் திடியன் கல்வெட்டு (2200 years Before)
குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கிறது.
2) கிமு 1ம் நூற்றாண்டில் திடிகாத்தான் கல்வெட்டு (2100 years Before)
திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.
3) கிமு 1ம் நூற்றாண்டில் நாகபேரூர் (நாகமலை) கல்வெட்டு (2100 years before)
’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.
ஒப்புமை நினைவால் கருவூர்ச் சேரர் சூட்டிய பெயர் இந்த ஊர் முசிறி. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்). இதன் பெயர்தான் காவிரிக்கரை முசிறிக்குச் சூட்டப்பட்டுள்ளது. இங்கே இப்பொழுதும் கள்ளர் குடியினரே வாழ்ந்து வருகின்றனர். புத்தர், சமண சிற்பங்கள் உள்ளன.
இளமன், இளமநாச்சி என்னும் பெயர்கள் கல்லம்பட்டி தெற்குதெரு கள்ளர் கிராமங்களில் அதிகம்.
பெரிய மூத்த பெண்ணிற்கு பெரிய இளமி என்றும் சின்ன இளைய பெண்ணிற்கு சின்ன இளமி என பெயர் வைக்கிறார்கள் கள்ளந்திரி கல்லம்பட்டியில் வகுத்தி என்னும் கள்ளர் கூட்டம்
4) கிபி 8ம் நூற்றாண்டில்
குயில்குடி ஊரார் பற்றி கல்வெட்டு (1200 years before)
தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு:
’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘
’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘
குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம்.
5) கிபி 10ம் நூற்றாண்டில் தென்கல்லக நாடு பற்றிய கல்வெட்டு (1000 years before)
கிபி 10ம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் காலத்தில் தென்கல்லக நாடு என்கிற பெயரில் ஆணையூர் கல்வெட்டு குறிக்கப்பட்டுள்ளது.
கிபி 10ம் நூற்றாண்டில் இறுதியில் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை முழுமையாக தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அப்போது தென்கல்லக நாட்டில் பல்வேறு தானங்களை செய்துள்ளார்.
6) கிபி 11ம் நூற்றாண்டில் வாலாந்தூர் படைதலைவன் பற்றிய கல்வெட்டு (900 years Before)
கிபி 11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டிலும் தென்கல்லக நாடு பற்றி குறிப்பு உள்ளது.
இராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் தனது மகனான சுந்தர சோழனுக்கு பாண்டியன் என்ற பட்டத்தை சூட்டி மதுரையின் ஆட்சியாளராக அமர்த்தினார். அப்போதும் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் தென்கல்லக நாட்டு ஆணையூரில் (திருக்குறுமுள்ளூர்) கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
7) கிபி 13ம் நூற்றாண்டில் கருமாத்தூர் கல்வெட்டு (700 years Before)
9) கிபி 15ம் நூற்றாண்டில் வைரவன் பற்று ( தும்மக்குண்டு) கல்வெட்டு (500 years Before)
10) கிபி 13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டில் "வாராந்தூர்_ஊரார்" பற்றி குறிப்பு உள்ளது.
11) கிபி 1488ல் வாணாதிராயர்கள் வெளியிட்ட கல்வெட்டிலும் "புரமலை கல்லக நாடு" என்று உள்ளது.
12) கிபி 1453ல் ஆட்சி புரிந்த மாவலி வாணாதிராயர் ஶ்ரீவில்லபுரத்தில் வெளியிட்ட கோவில் சாசனத்தில் திடியன் நாட்டை மையமாக கொண்டு தனது ஆட்சியின் நிலப்பரப்பை கூறினார். அதில் திடியன், வாராந்தூர், கருமாத்தூர், புத்தூர், வைரவன் பற்று , புளியஞ்சோலை முதலிய ஊர்கள் பற்றி குறிப்பு உள்ளது. இவை பிறமலைக்கள்ளர்களின் நாட்டமைப்பு கொண்ட ஊர்கள் என்பதை தெளிவாக அறியலாம்.
13} கிபி 15ம் நூற்றாண்டுகளில் மதுரையில் ஆட்சி செய்த வாணாதிராயர்களால் வெட்டப்பட்ட புதுக்கோட்டை கல்வெட்டுகளில் தாங்கள் மதுராபுரி அரசன் என்றும் "கண்ணன் வார்கழற் கல்ல மலை" (அழகர் மலை) என்றும் "கல்ல அசுரர்" என்ற பெயர்களும் காணப்படுகிறது.
பிறமலை கள்ளர்களின் நாட்டமைப்பு கொண்ட ஊர்கள் ஆதியில் இருந்தே பழமையானது. அந்த ஊர்களில் கள்ளர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்ததின் காரணமாக தான் அவைகள் இன்று பிறமலை கள்ளர்களின எட்டு நாடுகளாக உள்ளன. திடியனை முதல் நாடு என்று சொல்வதற்கும் தும்மக்குண்டை கடைசியாக உருவான நாடு என்று சொல்வதற்கும் இந்த கல்வெட்டுகள் ஒரு சாட்சியாக அமைகிறது.
இன்றைய பிறமலை கள்ளர்களின் எட்டு நாடுகள் பாண்டியர் சோழர் காலத்தில் தென்கல்லக நாடு என்ற பெயரில் ஒரே நாடாக நிர்வாகத்தில் இடம்பெற்று இருந்துள்ளது.
இப்படி பல தரவுகள் பிறமலை கள்ளர்கள் யாரிடமும் இருந்து பிரிந்தவர்கள் அல்ல, தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்தவர்கள் என்பதை இத்தகைய ஆதாரங்களை வைத்து சொல்லலாம். M130 y மரபணு அறிக்கையும் இவற்றை உறுதிபடுத்துகிறது.
பிறமலை கள்ளர்கள் தொல்பழங்குடி மக்கள் என்பது அவர்களின் வாழ்விடமே சான்று. உசிலம்பட்டி வட்டார பகுதியில் கிடைத்த பாறை ஓவியங்கள் இதனை உறுதி செய்கிறது. குறிப்பாக காளை அடக்குதல் போன்ற சல்லிகட்டு ஓவியமும், யானையை அடக்குதல் போன்ற ஓவியங்களும் கள்ளர்களின் ஆதிகாலத்தை நினைவு படுத்துகிறது.
1) காளை அடக்குதல்
திமில் கொண்ட காளையை ஒருவர் அடக்குவது போன்ற ஓவியம் உள்ளது. இந்த ஓவியம் இன்றைய சல்லிகட்டை நினைவுபடுத்துகிறது.
2) குதிரை சவாரி
குதிரையில் ஒருவர் சவாரி செய்வது போல பாறை ஓவியம் வரையப்பட்டுள்ளது.
3) யானை அடக்குதல்
காட்டு யானையை ஒரு குழுவினர் சேர்ந்து அடக்குதல் அல்லது வேட்டை ஆடுதல் பற்றிய பாறை ஓவியம். கள்ளர்கள் யானை அடக்குவதில் சிறந்தவர்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4) காது வளர்த்தல்
இன்றும் கள்ளர் இன கிழவிகளும், கள்ளர் இன பூசாரிகளும் காது வளர்ப்பு செய்கின்றனர். இதனை ஆதி கால பாறை ஓவியம் தெளிவாக காட்டுகிறது. காது வளர்த்து அதனை தோல்பட்டையில் தொங்க விடுவதை உசிலம்பட்டி பகுதி கள்ளர்களிடம் காணலாம்.
இது போன்ற எண்ணற்ற ஓவியங்கள் உசிலம்பட்டி வட்டாரப்பகுதியில் கிடைக்கிறது. இவை இன்றை பிறமலை கள்ளர்களின் வாழ்வியலை எடுத்து காட்டுகிறது.
ஓவியம் உள்ள இடம் : உசிலம்பட்டி சித்ரகல் பொடவு, க.மேட்டுப்பட்டி
கள்ளர்கள் குமரி முதல் வேங்கடம் வரை இருந்த கள்ளர்கள், இன்று சுருங்கி தேனி முதல் திருச்சி வரை சுருங்கிவிட்டனர். (திருச்சி - தஞ்சை - திருவாரூர் - பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை - சிவகங்கை - மதுரை - தேனி ). புதுக்கோட்டை கள்ளர்கள் வாழ்ந்த பகுதியில் வேங்கடத்திலிருந்த தொண்டைமான்கள் வந்து தங்கியது போல், பழமையான பிரமலை கள்ளர்கள் பகுதியில் பிற்காலத்தில் சில கள்ளர்கள் வந்து தாங்கியுள்ளனர். பிரமலை கள்ளர்கள் அனைவரும் தொண்டை, தஞ்சை பகுதியில் இருந்து வந்தவர்கள் அல்ல.
பிறமலைக்கள்ளர்களும் 1000 வருடம் பாரம்பரிய நாட்டமைப்பும் பற்றிய மற்றொரு ஆய்வு.
8 நாடுகளும் அதனை உள்ளடக்கிய 24 உபகிராமங்கள் என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் பிறமலைக்கள்ளர் நாடுகளாக வரையறை செய்யப்படுகிறது.
* திடியன்
* வாலாந்தூர்
* புத்தூர்
* கருமாத்தூர்
* பாப்பாப்பட்டி
* கொக்குளம்
* வேப்பனூத்து
* தும்மக்குண்டு போன்றவை.
ஆனால் இவை நாயக்கர் காலத்தில் தான் உருவானது என்று பல ஆய்வாளர்கள் சொல்லி வந்தனர். தற்போதைய பல தரவுகள் அத்தகைய கருத்துக்களை உடைத்துள்ளது.
மதுரையில் மேல்நாடு (மேற்கு நாடு) என்று அழைக்கப்படும் பிறமலைக்கள்ளர் நாடு தொல்லியல் தரவுகள் படி 1000 வருடங்களுக்கு மேல் பழமை என்பதற்கான சான்றுகள் உள்ளது. (கல்வெட்டு, செப்பேடு தரவுகள் படி)
பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் பிறமலைக்கள்ளர் நாடுகள் தென்கல்லக நாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது மட்டும் அல்லாமல் அது தமிழ் அரசர்களின் படைத்தளங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளது.
கிபி 13ம் நூற்றாண்டுக்கு பின்பு முஸ்லிம் படைகளிடம் பாண்டியர் பேரரசு வீழ்ச்சி அடைந்து மதுரையே விட்ட வெளியேறினார்கள். அதன் பிறகு முஸ்லிம் படையே வீழ்த்தி விஜயநகர பேரரசு மதுரையே கைப்பற்றியது. விஜயநகர பேரரசுக்கு கீழ்படிந்து வாணாதிராயர்கள் என்பவர்கள் மதுரையில் ஆட்சி செய்கிறார்கள். அப்போது வாணாதிராயர்களின் செயல்பாடுகள் தென்கல்லக நாடு (பிறமலைக்கள்ளர் நாடு) பகுதியில் அதிகமாக இருந்துள்ளது. அதன் காரணம் பாண்டியர் படைகளாக செயல்பட்ட கள்ளர் நாடுகளை கட்டுப்படுத்துவதற்காக வாணாதிராயர்களை (தஞ்சை பகுதி கள்ளர்களில் வாணாதிராயர் மரபினர் இன்றும் வாழ்ந்தி வருகிறார்கள் - சில கல்வெட்டு வாணாதிராயர் அகம்படி மற்றும் வெள்ளான் என்றும் குறிப்பிடுகிறது) விஜயநகர பேரரசு அமர்த்துகிறது.
கிபி 1453ம் வருடம் ஆட்சியில் இருந்த உறங்கா வில்லிதாசன் மகாபலி வாணாதிராயர் என்பவன் ஶ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கு நில தானங்கள் அளித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆட்சி நிலப்பரப்பு பற்றி குறிப்புகளை சாசனங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாணாதிராயர் தன்னுடைய எல்லைப்பகுதிகளாக
* திடியன் நாடு, * புத்தூர் மலை, * வைரவன் பற்று (தும்மக்குண்டு), * வாரந்தூர், * கருமாத்தூர் * புளியஞ்சோலை
போன்ற ஊர்களை தன்னுடைய எல்லைப்பகுதிகளாக வாணாதிராயர்கள் குறித்துள்ளனர்.
இவை இன்றைய பிரமலைக்கள்ளர்களின் 8 நாட்டை சேர்ந்த எல்லைப்பகுதி என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
கிபி 1488ல் மஹாபலி வாணாதிராயர் ஆட்சியில் சித்தர்மலை மகாலிங்கம் கோவிலில் வெளியிடப்பட்ட கல்வெட்டிலும் "புரமலை கல்லகனாடு" என்று தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.
16ம் நூற்றாண்டுகளில் வாணாதிராயர் ஆட்சி முடிவுற்று நாயக்கர் ஆட்சி முறை மதுரையில் ஏற்பட்டது. கிபி 1623 ல் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலத்து செப்பேடும் பிறமலைக்கள்ளரின் எட்டு நாடு பற்றியும் அதனுடைய ஊர்களை பற்றியும் தெளிவாக கூறுகிறது.
ஆங்கிலேயர் காலத்திலும் இந்த கள்ளர் நாடுகள் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வந்துள்ளதை, ஆங்கிலேயர் ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.
இப்படி பாண்டியர், சோழர்கள் காலம் தொட்டு வாணாதிராயர் , நாயக்கர் காலம் வரை தென்கல்லக நாடு , புரமலை கல்லகனாடு என்று அழைக்கப்பட்ட பிறமலைக்கள்ளர்களின் நாட்டு அமைப்பு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான பாரம்பரியத்துடன் இருந்து வருகிறது.
Reference book : தென்கல்லக நாடு, தென்னிந்திய கோவில் சாசனம்
மேலே குறிப்பிட்ட கல்வெட்டுகள் அனைத்தும் நாயக்கர் காலத்திற்கு முன்பே பிறமலை கள்ளர்களின் நாடுகள் இங்கு இருந்துள்ளது . 16ம் நூற்றாண்டில் தான் நாயக்கர் ஆட்சி மதுரையில் உருவாகிறது. அதற்கு முன்பே கள்ளர் பற்றிய தரவுகள் கல்வெட்டு வாயிலாக தெளிவாக உள்ளது.
மேலும் பிறமலைக்கள்ளர் பகுதியில் தான் தொல்பழங்குடிகள் பற்றிய அதிகமான தொல்லியல் சான்றுகளும், ஆநிரை கவர்தல் பற்றி பாறை ஓவியங்களும், சல்லிகட்டு ஓவியமும் கிடைக்கிறது.
இப்படி பிறமலைக்கள்ளர்கள் பற்றிய தரவுகள் பாண்டியர் காலத்தில் இருந்தே தென்கல்லக நாடு, கல்ல நாடு புரமலை கல்லக நாடு போன்ற பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் பிறமலைக்கள்ளர்களின் நாட்டமைப்பை கூறுகிறது. இப்படி இருக்கும் போது நாயக்கர் காலத்தில் இருந்து தான் பிறமலைக்கள்ளர் வரலாறு துவங்குவதாக தவறாக கூறி வருகின்றனர்.
ஆதியில் இருந்தே மதுரையின் பூர்வ தொல்குடிகளாக கள்ளர்கள் வாழ்ந்து வந்ததற்கான சாத்திய கூறுகள் கல்வெட்டு வாயிலாக கிடைக்கிறது.
குறிப்பாக m130y என்ற மரபணு பிறமலை கள்ளர்களை தொல்பழங்குடியினர் என்பதை பறைசாற்றுகிறது. மேலும் கள்வர் பெருமகன் பாண்டியன் என்பதை சங்க இலக்கியம் மூலமும் நாம் அறியமுடிகிறது.
மேலும் சில ஆய்வாளர்கள் இவர்கள் பாரியின் வழி வந்தவர்களாகவே குறிப்பிடுகின்றனர்.
பாரி பறம்புமலையை ஆட்சி செய்த மன்னன். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். இவர் குறுநிலமன்னர்களில் ஒருவர் ஆவார். பாரி வேளி குலத்தைச் சார்ந்தவர்; எனவே, இவரை 'வேள்பாரி' என்றும் அழைப்பர். பாரி பறம்பு மலையையும் அதனைச்சூழ்ந்த நாட்டையும் ஆண்டவர். இந்தப் பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை இக்காலத்தில் 'பிரான்மலை' என்று வழங்குகின்றது. பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
ஓரியர் = சக்கரவாள சக்கரவர்த்திகள் = நாகவம்சத்தினரின் தலைவர்கள். பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்). கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்பது நாம் அறிந்த்தே.
திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே. இவர்களுக்கு மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.
இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி, மலைச்சாமி போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம்.
திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற வம்சத்தினரே பிரமலைக்கள்ளர்.
திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த (பாடிக்காப்போனாக ) திசைக்காவல் 'மழவராயர்' பிரமலைக் கள்ளரே.
இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன், சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவரமுடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை மழவராயனுடைய வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது.
'மழவர்' என்பது மலைக்கோவலராகிய பிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெய
8 நாடுகள்
24 உப கிராமம்
மதுரைநகரத்துக்குமேற்குப்பகுதியில்வாழ்கின்றபிரமலைக்கள்ளர்கள்,மேல்நாட்டுகள்ளர்கள் என்றும்,ஆனையூர்கள்ளர்கள் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம்,பாண்டியர் ஆட்சிகாலம்முதல் இப்பகுதிக்கானவருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்தது. அதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தகள்ளர்கள் ஆனையூர்கள்ளர்கள் எனப்பட்டனர்.புறமலைநாடுதிருப்பரங்குன்றமலைகிழக்குஎல்லையாகவும், ரத்தினகிரிமலை (கணவாய்மலை) மேற்குஎல்லையாகவும், குண்டாறு தெற்குஎல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ளபகுதியே புறமலை அல்லது பிரமலை நாடு. இவற்றை அறுதியிடப்பட்ட எல்லைகளாகக் கொள்வதைக்காட்டிலும், பொது வானநிலவியல் குறிகளாகவேகொள்ளலாம். ஏனெனில் நாகமலைக்கு வடக்கேயும் சில பூர்வீகக் கள்ளர்கிராமங்கள் உள்ளன. அதனால் வைகை ஆற்றங்கரையையே இதன் வடக்கு எல்லையாகக்கருதமுடியும் என ஆனந்த பாண்டியன் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.இது, இன்றைய மதுரைமாவட்டத்தின் உசிலம்பட்டி ஒன்றியம், செல்லம்பட்டி ஒன்றியம், சேடப்பட்டி ஒன்றியம்,திருமங்கலம் ஒன்றியம்,திருப்பரங்குன்றம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதி, சோழவந்தான் ஒன்றியத்தின் தென்பகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்கள் பிறமலைக்கள்ளர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாககொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர்.1931க்குப்பின் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதால் இவர்களது எண்ணிக்கையை அறுதியிட்டுக்கூற இயலவில்லை.ஆனால் சமீபத்தில் இவர்களைப்பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஆனந்தபாண்டியன் பிரமலைக்கள்ளர்களது மக்கள்தொகைஒருமில்லியனுக்கும் சற்றுக்குறைவாக இருக்கும் என கணக்கிடுகின்றார். அதாவது இவர்களது தற்போதைய மக்கள்தொகை தோராயமாகப் பத்துலட்சமாக இருக்கவாய்ப்புள்ளது.கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கள்ளர்கள் இப்பகுதியில் வந்து குடியமர்ந்தனர் எனவரலாற்றாசிரியர் ஆர். கே. கண்ணன் குறிப்பிடுகின்றனர்.அதன் பிறகு தான் மதுரைக்குக் கிழக்குப்பக்கத்திலிருந்து கள்ளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் குடியமரத்துவங்கினர். கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார். அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு எட்டிற்கும் கம்பளிவிரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் திருமலைபின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றது. இதை வைத்துப்பார்க்கும்பொழுது 1650களிலேயே இவர்கள் மத்தியில் எட்டுநாடு என்ற அமைப்பு உருவாகிவிட்டது. அப்படி யென்றால் அதற்கு 2 அல்லது 3 தலை முறைகளுக்கு முன்பாக இவர்கள் இப்பகுதியில் குடியேறியிருந்தால்தான் அந்தநிலைப்பாட்டை அடைந்திருக்கமுடியும்.இதன்படிபார்த்தால் இவர்களது குடியேற்றம் 16 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கலாம். அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஸ்டுவர்டுப்ளாக்பர்ன், கள்ளர்கள் 1600 இல் ஆனையூர்பகுதியில் குடியேறினர் எனக் குறிப்பிடுகின்றனர்.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்புபிரான்மலைப்பகுதியில் பிரான்மலைகள்ளர் என்ற ஒரு வகுப்பார் வாழ்ந்துவந்தனர்.அவர்களில் ஒருசிலர் அவ்வகுப்பாரிடமிருந்து பிரிந்துவந்து மதுரைக்கு மேற்குப்பகுதிகளில் குடியமர்ந்தனர். அவர்கள் பிரான்மலைக்கள்ளர்கள் எனப்பட்டனர். அச்சொல்லே மருவி பிரமலைஎனப்பட்டது.இராஜதானி - எட்டுநாடு24 உபகிராமங்கள்பிரமலைப்பகுதி இராஜதானி, எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. இதன் தலைமைக் கிராமம் ராஜதானி என அழைக்கப்படுகிறது. இவ்வகை அமைப்பு எக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதனை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.ஆனால் 1655 இல்திருமலைநாயக்கர்,உரப்பனூர் திருமலை பின்னத்தேவனுக்கு அளித்த பட்டயத்திலேயே எட்டுநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வைத்துப் பார்க்கும்பொழுது அதற்கு ஒரு சில தலை முறைகளுக்கு முன்பாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த எட்டுநாடுகள் உருவாக்கப்பட்டபின்பு புதிதாக உருவானகிராமங்கள் அவற்றிற்குத்துணைகிராமங்கள் என்ற வகையில் உபகிராமங்களாக அடுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம்.கள்ளர்கள் தாங்களாகவே சுயமாகத் தாங்கள் வாழ்கின்ற பகுதியை எட்டுநாடுகளாகப் பகிர்ந்து கொண்டனர். அதில் தன்னரசு ஆட்சியை உருவாக்கினர். அதன்பிறகு திருமலைநாயக்கர் அவருக்கு அறிமுகமான பின்னத்தேவர் எனப்பெயரிட்டு இந்த எட்டுநாட்டின் தலைவராகநியமித்தார். அவருக்குத்துணையாக இரண்டு தேவர்களையும் நியமித்தார். அவர்வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது. அதுவரை தன்னரசாய்த் திகழ்ந்து இக்கள்ளர்நாடு உரப்பனூர் ராஜதானி என்ற பெயரில் நாயக்கமன்னர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.இனி ராஜதானி - எட்டுநாடு - 24 உபகிராமம் என்ற இந்த மூன்று அடுக்குளின் அமைப்பு பற்றிச் சற்று விரிவாகக்காண்போம்.இந்த எட்டுநாடுகள், 24 உபகிராமங்களின் தோற்ற வரலாறுகளை அவர்கள் மத்தியில் இன்றும் வழக்கில் உள்ள மரபுவழி வரலாற்றுக் கதைகள் மூலம் பதிவு செய்கிறேன்.உரப்பனூர், பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைமைக் கிராமமாகக் கருதப்படுகின்றது. ஓர் அப்பன் ஊர் என்ற சொல்லே உரப்பனூர் என்று மருவியது என்கின்றனர். இது கீழ்உரப்பனூர், மேல்உரப்பனூர், ஊராண்டஉரப்பனூர் என மூன்று கிராமங்களாக உள்ளது. இவை இன்றைய திருமங்கலம் ஒன்றியத்தில் அமைந்திருக்கின்றன.பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எங்ஙனம் நாடுகள் என்றும் உபகிராமங்கள் என்றும் இரண்டு நிலைகளில் பிரிக்கப்பட்டன என்பதனை அறுதியிட்டுக்கூ றஇயலவில்லை.முதலில் உருவாக்கப்பட்ட வைநாடுகள் என்றும் அதன்பின்பு உருவான கிராமங்கள் அதற்குத் துணையான உபகிராமங்கள் எனவும் பிரிக்கப்பட்டிருக்கலாம். இனிஎட்டுநாடுகள் பற்றிப்பார்ப்போம். பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.இதில் எது முதல் நாடு என்ற சர்ச்சை திடியன் நாட்டிற்கும், வாலாந்தூர் நாட்டிற்கும் இடையே பலதலைமுறைகளாக நடந்து வருகின்றது.கள்ளர்கள் தாங்களாகவே தங்களுக்குள் நாடுகளை உருவாக்கிக் கொண்டு அதில் தன்னாட்சி செலுத்திவந்தனர்.பிறகு திருமலைநாயக்கரின் ஆட்சிகாலத்தில் உரப்பனூர் ராஜதானி (ராஜதானி என்பதற்கு மாகாணம் என்றுபொருள்)என்ற பெயரில் மதுரை அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இக்கள்ளர் நாடு கொண்டு வரப்பட்டது. உரப்பனூரைச் சேர்ந்த பின்னத்தேவர் என்பவர் திருமலை பின்னத்தேவர் என்ற பட்டத்துடன் இவ்எட்டுநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தனது மருமகனைக் கௌரவிக்கின்றவகையில் வாலாந்தூர் நாட்டை தனது அதிகாரத்தின்கீழ் இருந்து உரப்பனூர் ராஜதானிக்கு முதல் நாடாக ஆக்கினார்.பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் பேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.